தீவிரவாத தாக்குதல் நடத்தி கைலாசாவை அழிக்க முயற்சி! அலறிய நித்தியானந்தா!
கைலாசா நாட்டின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்த உள்ளதாகவும், 'பயோவார்' நடத்த சதித்திட்டம் நடத்துவதாகவும் சாமியார் நித்யானந்தா அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.
பாலியல் புகார் குற்றச்சாட்டில் சிக்கிய நித்தியானந்தா சாமியார், இந்திய நாட்டை விட்டே ஓடி ஒளிந்தார். திடீரென்று சமூகவலைத்தளத்தில் தோன்றி நான் தனித்தீவில் ஒரு நாட்டையே உருவாக்கிவிட்டேன் என்றும், அந்நாட்டிற்கு கைலாசா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
நித்தியானந்தா இருக்கும் இடத்தை யாராலையும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அது ரகசியமாகவே உள்ளது. அடிக்கடி நித்தியானந்தாவின் பிரசங்க வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வீடியோக்களில் அவர் ஆன்மீக சொற்பொழிகள் ஆற்றி வருவார். கைலாசா நாடு அமெரிக்காவின் கடல்பகுதியில் உள்ள ஏதே ஒரு தீவில் நித்யானந்தா உருவாக்கி இருக்கிறார் என்றும், இல்லை.. அவர் இந்தியாவிலேயே தான் இருந்து கொண்டு பேசுகிறார் என்றும் வதந்திகள் பரவின.
இந்நிலையில், தற்போது திடீரென்று நித்தியானந்தா, தன்னை பல பேர் பல்வேறு வகையில் தாக்கிவிட்டதால் இந்திய நாட்டை விட்டே நான் வெளியேறி விட்டேன் என்றும், கைலாசா நாட்டை அழிக்க பயங்கரவாதிகள் விதைகளை அனுப்பி பயோவார் நடத்த சதி நடப்பதாக அலறியபடி கூறியுள்ளார்.
இந்து தர்மத்தின் வேர்களையும், இந்து மதத்தின் கடைசி விளக்கையும் அழிக்க மற்றொரு முயற்சியாக "பயங்கரவாதத்தை விதைகள்" மூலம் அனுப்பும் கொடிய சதி நடந்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
சீரியஸாக பேசிய நித்தியானந்தாவின் வெப்சைட்டில் எங்குமே அட்ரஸ் இல்லை. எனவே எப்படி விதைகளை அனுப்பினார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.