தனது இமெயில், செல்போன் ஹேக் செய்து ஆதாரங்களை அழிக்க முயற்சி - நடிகை சாந்தினி

tamilnadu-samugam
By Nandhini Jun 03, 2021 09:40 AM GMT
Report

நடிகை சாந்தினி தனது செல்போனை ஹேக் செய்ய முயற்சி நடப்பதாக போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி, சமீபத்தில் பாலியல் புகார் ஒன்றை காவல்நிலையத்தில் அளித்தார். அந்த புகார் மனுவில், என்னுடன் 5 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஏமாற்றிவிட்டதாகவும், அவரால் 3 முறை கருவை கலைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மணிகண்டனுக்கு எதிராக ஆதாரங்களை திரட்ட தனிப்படை போலீசார் நேற்று ராமநாதபுரம் விரைந்தனர். இந்நிலையில், மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்த நடிகையின் செல்போனை ஹேக் செய்ய முயற்சி நடப்பதாக தற்போது பரபரப்பு புகார் கொடுத்துள்ளர்.

சிபிஐ என்ற பெயரில் போலி இ-மெயில் அனுப்பி துணை நடிகையின் செல்போனை ஹேக் செய்ய முயற்சி செய்துள்ளனர். தனது இமெயில் , செல்போன் ஹேக் செய்து ஆதாரங்களை அழிக்க முயற்சி நடக்கிறது என துணை நடிகை புகார் அளித்துள்ளார்.