கேரளாவில் மீண்டும் தமிழில் பதவிப்பிரமாணம் ஏற்ற எம்.எல்.ஏ.

tamilnadu-samugam
By Nandhini Jun 03, 2021 08:29 AM GMT
Report

கேரள மாநிலம், தேவிகுளம் தொகுதியின் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. ராஜா, 2-வது முறையாக நேற்று தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. ராஜா, கடந்த மே 24ம் தேதி நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், தமிழில் எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்தில் பிழை இருந்ததால் உறுதி மொழி ஏற்றுக்கொண்டிருக்கும் போது இறுதியில், உளமாற உறுதியளிக்கிறேன் என்பதற்குப் பதில் உறுதியளிக்கிறேன் என்று முடித்துவிட்டார். இந்த விவகாரம் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அவர் மீண்டும் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதனையடுத்து, நேற்று திருவனந்தபுரத்தில் கேரள சபாநாயகர் ராஜேஷ் முன்னிலையில் ராஜா மீண்டும் தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

கேரளாவில் மீண்டும் தமிழில் பதவிப்பிரமாணம் ஏற்ற எம்.எல்.ஏ. | Tamilnadu Samugam