மத்திய சிறை உட்பட கிளை சிறையில் உள்ள 8 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி!
வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள வேலூர் மத்திய சிறை மற்றும் வேலூர் சரகத்திற்குட்பட்ட திருப்பத்தூர், போளூர் உள்ளிட்ட கிளை சிறையில் உள்ள மொத்தம் 8 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் வேலூர் பெண்கள் தனிச்றையில் 3 கைதிகளுக்கு, திருப்பத்தூர், போளூர் கிளை சிறைகளில் தலா 2 கைதிகளுக்கும், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் ஒரு கைதிக்கும் என இதுவரை மொத்தம் 8 கைதிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுப் பாதித்த 8 கைதிகளில் 4 பேர் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.
மேலும், சிறைவாசிகள் கொரோனா தொற்றால் பாதிக்காத வகையில் முதல்கட்டமாக 100 பேருக்கும், இரண்டாம் கட்டமாக 150 பேருக்கும் என சுமார் 250 பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. போதிய நோய் தடுப்பு நடவடிக்கைகளும் சிறைத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.