திடீரென உதயநிதியைச் சந்தித்த நடிகை வரலட்சுமி : காரணம் இதுதானாம்?

tamilnadu-samugam
By Nandhini Jun 03, 2021 07:01 AM GMT
Report

நடிகர் சரத்குமார் மகளாகிய நடிகை வரலட்சுமி தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பல சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண்களுக்காக சேவ் சக்தி என்ற அமைப்பை உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ஊரடங்கு காலத்தில் பசியோடு தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு உணவு அளித்து வருகிறார்.

வரலட்சுமி ஊரடங்கில் ஆதரவற்ற விலங்குகளுக்கு 2 டன் உணவு வழங்கி உள்ளார். இந்நிலையில், இன்று திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினை சந்தித்து அவர் மூலமாக, கோவிட் ஹெல்ப்லைன் சேவையை அனைத்து தரப்பு மக்களும் அறிந்து உதவி பெற்றுக் கொள்ள அதற்கான திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

இதுகுறித்து, உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “Save Shakti-Sankalp Beautiful World-Pedigree India சார்பில் ஊரடங்கில் ஆதரவற்ற விலங்குகளுக்கு 2டன் உணவு வழங்கபட்டு வருகிறது. இச்சேவையை அனைத்து தரப்புக்கும் கொண்டுசேர்க்க அதன் விவரத்தை Save Shakti அறக்கட்டளை நிறுவனர் வரலட்சுமி இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு நன்றி.வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். 

திடீரென உதயநிதியைச் சந்தித்த நடிகை வரலட்சுமி : காரணம் இதுதானாம்? | Tamilnadu Samugam