தரையில் கிடந்த பிணங்கள் - மக்கள் அச்சம்!
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் தரையில் பிண உடல்களைப் போட்டிருந்தனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் பணியாளர்கள் இருவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
பெரியகுளத்தைச் சேர்ந்தவர் பாலதண்டாயுதபாணி. இவர் திருப்பூர் பின்னலாடை நிறுவன ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக இவரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் இவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது. அப்போது இவருடைய ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்திருந்தது.
உடனடியாக மேல்சிகிச்சைக்காக, கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இந்நிலையில், நேற்று காலை அவரது உடலை வாங்க அவரது சகோதரர் வெங்கடேஷ், கரோனா பினவறைக்குச் சென்றிருந்தார்.
வாட்ச்மேன் மற்றும் ஒரு பணியாளர் மட்டுமே இருந்தார்கள். தண்டபாணியிடம் பிரேத உடலை கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கு, நீங்களே அடையாளம் கண்டு எடுத்துச் செல்லுங்கள் என்று பணியாளர்கள் கூறினர். உடனே உள்ளே சென்றபோது 2 மேடைகளில் மூன்று உடல்களும், கீழே தரையில் மூன்று உடல்களும் தனித்தனியாக 10 உடல்களும் அருகருகே கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், பாலதண்டாயுதபாணி உடலை தேடி கண்டுபிடித்து எடுத்துச் சென்று இறுதிச் சடங்கில் சடங்குடன் தகனம் செய்தனர்.
இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தேனி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் இருவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.