கொரோனா பயத்தால் மண்டையில் வேப்பிலையுடன் வலம் வரும் முதியவர்
புதுச்சேரியில் பல்வேறு கிராம மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், வெளியே செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று புதுச்சேரி அரசு வலியுறுத்தி வருகிறது.
திருக்கனூர் சித்தலம்பட்டைச் சேர்ந்தவர் பூங்காவனம் (65). இவர் வீட்டிலிருந்து தலையில் வேப்பிலையுடன் வெளியே வருகிறார். கடைகளுக்குச் செல்லும்போதும் தலையில் வேப்பிலையுடனேயே செல்கிறார்.
இது குறித்து பூங்காவனம் பேசுகையில், நான் முகக்கவசம் அணியாவிட்டாலும் வேப்பிலையை மட்டும் என் தலையில் கட்டிக்கொள்கிறேன். வேப்பிலைதான் என் கவசம். கொரோனாவை பற்றி நினைக்கும்போது எனக்கு பயமாக இருக்கிறது. அதனால்தான் நான் எங்கு சென்றாலும் வேப்பிலையுடன் செல்கிறேன் என்றார்.
இவர் தலையில் வேப்பிலையுடன் வலம் வரும்போது கிராம மக்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்க்கின்றனர்.
