பழனியருகே கோவில் சிலை உடைப்பு - மர்மநபருக்கு போலீசார் வலை

tamilnadu-samugam
By Nandhini Jun 02, 2021 06:45 AM GMT
Report

பழனியருகே கோவில் சிலையை உடைத்த மர்மநபர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ளது கோதைமங்கலம் ஊராட்சி.

இங்கு பெரியாவுடையார் கோவில் செல்லும் வழியில் உள்ள பாப்பான்குளம் கரையில் கன்னிமார் கருப்பணசாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சிவலிங்கத்தை நேற்று இரவு மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பழனி தாலுகா போலீசார் சிலை உடைக்கப்பட்ட இடத்தில் சோதனை நடத்தினர். உடைக்கப்பட்ட சிலையில் இருந்த லிங்கத்தையும் காணவில்லை. இதனையடுத்து, பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலையை உடைத்த மர்மநபர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.