கத்தி, பட்டா கத்தி காட்டி இன்ஸ்டாகிராமில் மிரட்டிய இரு இளைஞர்கள் கைது!
திருப்பூரில் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இன்ஸ்டாகிராமில் கத்தி, பட்டா கத்தியுடன் பாட்டுப்பாடி வீடியோ ஒன்றை பதிவிட்டு வெளியிட்டிருந்தனர். தற்போது இந்த இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருப்பூரைச் சேர்ந்தவர் பீர்முகமது, ரகுமான் (எ) அப்பாஸ் ஆகிய இளைஞர்கள் இருவரும், தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கத்தி, பட்டா கத்தியுடன் பாட்டுப்பாடி பொது மக்களை மிரட்டும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.
இதைப் பார்த்த சமூவலைத்தளவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதை அறிந்த அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் சிவராஜ் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனையடுத்து, திருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
பின்னர், இவர்கள் இருவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, தாராபுரம் கிளை சிறையில் அடைத்துள்ளனர்.