முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவு - போலீசார் தீவிர விசாரணை!
பாலியல் புகார் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக போலீசார் ஆதாரங்களை திரட்டியுள்ளனர். முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி பாலியல் புகார் கொடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர் மணிகண்டனும் நானும் கடந்த 5 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தினோம்.
அவரால் நான் 3 முறை கர்ப்பமானேன். அவர் என்னை வற்புறுத்தி கருவை கலைக்க வைத்துள்ளார். தற்போது, திருமணம் செய்து கொள்ளாமல் என்னை ஏமாற்றி வருகிறார்.
திருமணம் செய்து கொள்ள நான் வற்புறுத்தியதால் என்னை கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுக்கிறார். என்னுடைய அந்தரங்க புகைப்படங்களை சமூவலைத்தளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டி வருகிறார் என்று சென்னை காவல் ஆணையரிடத்தில் புகார் கொடுத்தார். இந்த விவகாரம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து, நடிகை சாந்தினி அளித்த புகாரில் அடிப்படையில், போலீசார் ராமநாதபுரம் சென்றனர். மணிகண்டனின் குடும்பத்தினர், உதவியாளரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீடு பூட்டி உள்ளதாகவும், அவர் தலைமறைவாகி விட்டதாகவும் தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
இதனையடுத்து, மணிகண்டன் மனைவி, எனது கணவர் மீது வீண் புகார் அளித்து, மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்துவதாக நடிகை சாந்தினி மீது புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.