தடுப்பூசி போட்டுக் கொண்டால் பைக் முதல் வாஷிங்மிஷின் வரை பரிசு - இளைஞர்களின் புது முயற்சி!
tamilnadu-samugam
By Nandhini
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவருக்கு பிரியாணி, குலுக்கல் முறையில் மோட்டார் சைக்கிள், சலவை இயந்திரம், தங்க நாணயம், மற்றும் பல பரிசுகள் வழங்கப்படும் என தடுப்பூசி பற்றிய எதிர்மறை கருத்துக்களை விரட்ட தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த சில இளைஞர்கள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையை அடுத்துள்ள கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மேற்கொண்டுள்ள இந்த புது முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. பிரியாணி மற்றும் பரிசுப் பொருட்கள் பற்றிய அறிவிப்பால் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுகின்றர். சிலர் இந்த இளைஞர்களின் புது முயற்சிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.