கொரோனா தேவிக்கு சிலை வைத்ததே மிகப் பெரிய தவறு - கோவை சித்தர் பரபரப்பு தகவல்!
கோவையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இருகூர் அருகே கொரோனாவிற்கு சிலை வைத்து காமாட்சிபுரி ஆதினம் சார்பில் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
கோவை காமாட்சிபுரி ஆதீனம் சக்தி பீடத்தில் கொரோனா தேவி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் கோவை இருகூர் காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கொரோனா மாரியம்மன் கோவிலை கட்டினார்.
இந்நிலையில், கோவையில் கொரோனா தேவிக்கு சிலை வைத்தது தவறு என்று சித்தர் சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் பேசியதாவது -
நான் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக நாகசக்தி அம்மன் பீடத்தை நடத்தி வருகிறேன்.
இங்கு டெங்கு, சிக்கன் குனியா போன்ற காய்ச்சல்களுக்கு நிலவேம்பு கசாயம், பப்பாளி இலை சாறு போன்றவை மக்களுக்கு அளித்து வருகிறேன்.
சூலூர் பட்டணம் பகுதியில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில் அப்பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் மூலிகை கசாயத்தை வழங்குகிறேன்.
தமிழக அரசு சித்த வைத்தியத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
கொரோனாவால் உயிரிழப்புகள் வராமல் தடுக்க முடியும். சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் மருத்துவம் மூலமே கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
கோவையில் கொரானா தேவிக்கு சிலை வைத்திருப்பது தவறானது.
உண்மையில் கொரோனா சம்கார தேவிக்குதான் சிலை வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.