வேலூர் அருகே கேஸ் டேங்கர் லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாப பலி!
வேலூர் மாவட்டம் துரிஞ்சிதலைப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் (35). இவர் பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் வெல்டிங் பட்டறை ஒன்றை நடத்தி வந்தார்.
இந்நிலையில், ரமேஷ் தனது குடும்பத்தினருடன் குடியாத்தம் சென்று மீண்டும் பெங்களூருக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார்.
நேற்று மதியம் சென்னை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது.
செய்வது அறியாது காரை ஓட்டி வந்த ரமேஷ் அங்கு நின்று கொண்டிருந்த கேஸ் டேங்கர் லாரி மீது வேகமாக மோதினார்.
இந்த விபத்தில் ரமேஷ், அவரது மனைவி தீபா, ஒட்டு வயது குழந்தை நித்தீஷ், உறவினர் அஞ்சலி ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சரளா மற்றும் சிறுமிகள் சாரிகா, ஓவியா ஆகிய 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், மருத்துவமனையில் சரளா சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த பயங்கரமான விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.