ஒசூர் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி இல்லை என அறிவிப்பால் மக்கள் அதிருப்தி!
ஒசூர் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி இல்லை என அறிவிப்பால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகரில் தலைமை மருத்துவமனையில், மூக்கண்டப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இரண்டு மருத்துவமனைகளில் 45 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
ஆனால், 18 - 44 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஒசூர் சீதாராம் நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
ஞாயிறன்று தடுப்பூசி இல்லை என மருத்துவ நிர்வாகத்தினர் சார்பில் அறிவிப்பு பலகை மாட்டப்பட்டதால் ஏமாற்றமடைந்து சென்றிருந்தனர்.
நேற்று தடுப்பூசி போட்டுக்கொள்ள 2000த்திற்கும் அதிகமானோர் அங்கு குவிந்திருந்த நிலையில் 500 பேருக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டது.
இந்தநிலையில், இன்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த பொதுமக்கள், மீண்டும் தடுப்பூசி இல்லை என்கிற அறிவிப்பை பார்த்து அதிருப்தி அடைந்தனர். ஒசூர் பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.