காஞ்சிபுரத்தில் ஒரேநாளில் 9 பேர் கொரோனாவால் மரணம்!
tamilnadu-samugam
By Nandhini
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது. கொரோனா தொற்றால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று இரவு மட்டும் 3 பெண்கள் உட்பட 9 பேர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்னேரி பகுதியை சேர்ந்த சுபா (20) என்ற திருமணமான பெண் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார். இன்று பிரபாகரன் (35) என்பவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.