பெரம்பலூரில் கருப்பு பூஞ்சை நோயால் 2 பேர் பலி!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் எந்த அளவிற்கு கொரோனா பரவி வருகிறதோ, இன்னொரு பக்கம் கருப்பு பூஞ்சை நோய் தொற்றும் வேகமெடுத்திருக்கிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களையும், கொரோனா சிகிச்சையின் போது ஸ்டீராய்டு அதிகமாக எடுத்துக் கொண்டவர்களையும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களையும் கருப்பு பூஞ்சை நோய் பயங்கரமாக தாக்கி வருகிறது.
இந்த கருப்பு பூஞ்சை நோய் 1890ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் குணப்படுத்திவிட முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தற்போது, தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பெரம்பலூரில் ஒரே நாளில் 2 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி தனியார் மருத்துவமனையில் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளரான பொன்.கலியபெருமாள் மற்றும் அய்யாசாமி என்ற நோயாளியும் இந்நோயால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.