நீர்வீழ்ச்சியில் போட்டோ ஷூட் நடத்திய 3 இளைஞர்கள் சுழலில் சிக்கி பலி!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தீகலவலசை நீர்வீழ்ச்சியில் போட்டோஷூட் நடத்திய இளைஞர்கள் மூன்று பேர் சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக மரணமடைந்துள்ளர்.
பாடேரு கிராமத்தை சேர்ந்த நிரஞ்சன், வினோத்குமார், நாகேந்திர குமார் ஆகியோர் தீகலவலசை நீர்வீழ்ச்சிக்கு சென்று மகிழ்ச்சியுடன் போட்டோஷூட் நடத்திக் கொண்டிருந்தனர்.
தண்ணீருக்குள் இறங்கி போட்டோ ஷூட் நடத்திய போது, இளைஞர்கள் 3 பேரும் அங்குள்ள நீர் சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார்கள்.
3 பேரின் ஆடைகளும் நீர்வீழ்ச்சியின் அருகில் இருப்பதைப் பார்த்த கிராமத்தினர், அவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கக்கூடும் என்பதை உறுதி செய்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற போலீசார் நீச்சல் வீரர்கள் உதவியுடன் 3 பேரின் உடல்களை தேடி வருகின்றனர்.