ஆ.ராசா மனைவி பரமேஸ்வரி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் உதயநிதி ஸ்டாலின்!

tamilnadu-samugam
By Nandhini May 30, 2021 09:56 AM GMT
Report

கடந்த 6 மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி சிகிக்சை பலனில்லாமல் நேற்று உயிரிழந்தார்.

ஆ.ராசாவின் மனைவியின் இறப்பு செய்தி பெரும் வேதனை அளிப்பதாக முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் செய்தியில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, சென்னை குரோம்பேட்டையில் இருந்து பரமேஸ்வரியின் உடல் பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை வேலூரில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கொரோனா தடுப்பு பணிக்காக பிற மாவட்டங்களில் ஆய்வு செய்ய சென்று இருப்பதால், அவரால் இறுதி சடங்கில் பங்கேற்க இயலவில்லை.

இந்த நிலையில், முதல்வர் மு.க ஸ்டாலினின் மகனும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பரமேஸ்வரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் இறுதிச்சடங்கில் பங்கேற்றுள்ளனர்.