தமிழகத்தில் ஒரே நாளில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 3 பேர் பலி!

tamilnadu-samugam
By Nandhini May 30, 2021 09:44 AM GMT
Report

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக இன்று ஒரே நாளில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டதைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சுரேஷ் (49). இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சுரேஷுக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. திடீரென அவர் வீட்டில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து, அவரை உடனடியாக உறவினர்கள் மீட்டு குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் சுரேஷுக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். நேற்றிரவு சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். குமரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை காரணமாக மேலும் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சோபியா என்பவரும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், கருப்பணம்பட்டி பகுதியை சேர்ந்த ஆண் ஒருவரும் கருப்புபூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்துள்ளார். 

தமிழகத்தில் ஒரே நாளில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 3 பேர் பலி! | Tamilnadu Samugam