தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்!

tamilnadu-samugam
By Nandhini May 30, 2021 04:26 AM GMT
Report

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈரோட்டில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கொரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வுகள் மேற்கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்றிரவு அங்கு சென்றிருந்தார்.

அப்போது, ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புக்களிலும் கொரோனா முன்களப் பணியாளர்களாகப் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

பணியாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்புப் பைகளை வழங்கிய பிறகு தமிழக முதல்வர், உள்ளாட்சி அமைப்பினைச் சேர்ந்த அலுவலர்கள் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தொகுப்புப் பைகளை வழங்க உத்தரவிட்டார்.

தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்! | Tamilnadu Samugam