தொடரும் பாலியல் புகார் - 3 பள்ளிகளுக்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்!

tamilnadu-samugam
By Nandhini May 30, 2021 03:31 AM GMT
Report

ஆசிரியர் மீதான பாலியல் புகார் தற்போது தொடர்ந்து கொண்டு வருகிறது. 3 பள்ளிகளுக்கும் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணைக்காக சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை ஷெனாய் நகர் செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர் மீது தற்போது பாலியல் புகார் எழுந்துள்ளது. இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க சம்பந்தபட்ட பள்ளிக்கு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

ஆன்லைன் வகுப்பில் மாணவர்களிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக பத்ம ஷேசாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து அடுத்தடுத்து பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிக்கியுள்ளனர்.

இதனையடுத்து, பத்ம ஷேசாத்ரி பள்ளி, சேத்பட்டு மகரிஷி வித்யா மந்திர், ஆர்.ஏ.புரம் செட்டிநாடு வித்யாஷ்ரமம், ஷெனாய் நகர் செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆகிய 3 தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. 3 பள்ளிகளுக்கும் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணைக்காக சம்மன் அனுப்பியிருக்கிறது.    

தொடரும் பாலியல் புகார் - 3 பள்ளிகளுக்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்! | Tamilnadu Samugam