அடுத்தடுத்து 4 மகன்கள் கொரோனாவால் உயிரிழப்பு - அதிர்ச்சி தாங்காமல் தாய் திடீர் மரணம்!

tamilnadu-samugam
By Nandhini May 28, 2021 10:42 AM GMT
Report

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி பாப்பாள் (70). இவருடைய மகன்கள் 4 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

பாப்பாளின் மூன்றாவது மகன் கொரோனாவால் கடந்த 9ம் தேதி சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். அவருடைய மனைவியும் கொரோனாவால் உயிரிழந்து விட்டார்.

இதனையடுத்து, மூதாட்டியின் இரண்டாவது மகன் கடந்த 19ம் தேதியும், மூத்த மகன் 20ம் தேதியும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். கடைசி மகனும் கடந்த 24ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மூதாட்டியிடம் மகன்கள் 4 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்த தகவலை யாரும் சொல்லவில்லை. வழக்கமாக தன்னை பார்க்க வரும் மகன்கள் சில நாட்கள் வராததால் இது குறித்து மூதாட்டி அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார்.

அவரது மகன்களும், ஒரு மருமகளும் கொரோனாவால் உயிரிழந்த தகவலை மூதாட்டியிடம் அக்கம், பக்கத்தினர் தெரிவித்தனர். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மூதாட்டி. நேற்று இரவு திடீரென உயிரிழந்தார்.

தனது மகன்கள் இருந்த துக்கத்தில் தாயாரும் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து 4 மகன்கள் கொரோனாவால் உயிரிழப்பு - அதிர்ச்சி தாங்காமல் தாய் திடீர் மரணம்! | Tamilnadu Samugam