செங்கல்பட்டு அருகே கருப்பு பூஞ்சை நோய்க்கு 2வது நபர் பலி
செங்கல்பட்டு அருகே கருப்பு பூஞ்சை நோய்க்கு 2வது நபர் பலியாகி உள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த வில்வராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி (43). இவர் அரைப்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மார்க் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், முரளி கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில், அவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து, முரளிக்கு திடீரென வலது கண்ணில் கடுமையான வலி ஏற்பட்டது. அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கருப்பு பூஞ்சை நோய் தாக்கியிருப்பதைக் கண்டுபிடித்தனர்.
இன்று காலை 6 மணி அளவில் கண்ணில் வலி அதிகமான நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மதுராந்தகம் பகுதியில் இதுவரை 2 டாஸ்மார்க் ஊழியர்கள் பலி ஆகியுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.