மலைப்பகுதியில் உள்ள மாஞ்சோலையில் 32 பேருக்கு கொரோனா உறுதி!
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைத்திருக்கும் மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி ஊத்து ஆகிய பகுதிகளில் 1000க்கும் மேற்ப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் பணி செய்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், அம்பாசமுத்திரத்திலிருந்து மாஞ்சோலைக்கு வரும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அத்தியாவசிய தேவைக்காக கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் வரும் மாஞ்சோலை மக்கள் தற்போது மாஞ்சோலையில் முடங்கியுள்ளனர்
.இதனையடுத்து, மாஞ்சோலை 32 தோட்ட தொழிலாளர்களுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 6 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏற்கனவே, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மாஞ்சோலை பகுதியில் சுமார் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தற்போதும் மாஞ்சோலையில் தேயிலை அலை மூடப்படாமல் உள்ளது. இதனால், தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அப்பகுதியில் வாழும் தோட்ட தொழிலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.