சத்தியமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் காட்டு யானை பரிதாப பலி!
சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கிக்கொண்ட ஆண் காட்டுயானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் அருகே காராச்சி கொரை கிராமம் உள்ளது. இந்த கிராமம் புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டி அமைந்திருக்கிறது. இந்த கிராமத்தில் அடிக்கடி உணவு தேடி வனவிலங்குகள் வருவதுண்டு.
இந்த வனவிலங்குள் கிராமத்திற்கு வந்து அங்குள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி விட்டு செல்வது வழக்கமாகவே அங்கு நடந்து வருகிறது.
வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் வராதவாறு உரிமையாளர்கள், கம்பிவேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு உணவு தேடி வந்த 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டுயானை ஒன்று, ராமசாமி என்பவருக்கு சொந்தமான வாழைத் தோட்டத்திற்குள் செல்ல முயன்றி செய்துள்ளது.
அப்போது, மின்வேலியில் சென்ற உயர்அழுத்த மின்சாரம் பாய்ந்ததில் அந்த காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. காலையில் யானை உயிரிழந்து கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இத்தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், யானையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான நிலத்தின் உரிமையாளர் ராமசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
[YNVT7J