ஜூன் 3ம் தேதி 14 மளிகை பொருட்களுடன் ரூ. 2000 நிவாரணத் தொகை வழங்கப்படும் : தமிழக அரசு அறிவிப்பு!

tamilnadu-samugam
By Nandhini May 26, 2021 06:48 AM GMT
Report

தமிழகத்தில் 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் ஜூன்-3ல் துவக்கி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, ரூ. 4000 நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.

அதன்படி, முதல் தவணையாக ரூ.2000 கொரோனா நிவாரண நிதியாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, கொரோனா நிவாரண நிதி 2 -வது தவணையையும், 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் ஜூன்-3 ல் முதல்வர் துவங்கி வைக்க உள்ளார்.

மற்ற மாவட்டங்களில் ஜூன் 5-ம் தேதி செயல்பாட்டுக்கு வருகிறது. கோதுமை, உப்பு, சர்க்கரை, ரவை, உளுத்தம் பருப்பு, கடுகு, மஞ்சள், மிளகாய் தூள், குளியல் மற்றும் துணி துவைக்கும் சோப்பு உள்ளிட்ட 14 பொருட்கள் அடங்கிய பை வழங்கப்படும். இதன் மூலம் 2.11 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

ஜூன் 3ம் தேதி 14 மளிகை பொருட்களுடன் ரூ. 2000 நிவாரணத் தொகை வழங்கப்படும் : தமிழக அரசு அறிவிப்பு! | Tamilnadu Samugam