IBC தமிழ்நாடு செய்தி எதிரொலி : உணவின்றி தவித்து வந்த நரிக்குறவர் குடும்பங்களுக்கு உதவிய தொழிலதிபர்கள்

tamilnadu-samugam
By Nandhini May 26, 2021 04:18 AM GMT
Report

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கரியசந்திரம் கிராமத்தில் 200 நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.

ஊசி மணி, பாசி மணி, பொம்மைகள், வீட்டு அலங்கார பொருட்கள் உள்ளிட்டவை கிராமம் கிராமமாக சென்று விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக வியாபாரமின்றி வீடுகளிலேயே முடங்கி இருப்பதால் வருமானமின்றி ஒருவேளை உணவிற்கே அவதிப்பட்டு வருகின்றனர்.

பணமாக இல்லாமல், பொருளாக உதவிட அரசு முன்வர வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்த செய்தியை 20ம் தேதி IBC தமிழ்நாடு இணையத்தில் விவரித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

IBC தமிழ்நாடு செய்தி எதிரொலியாக ஒசூரை சேர்ந்த தொழிலதிபர்கள் கிருஷ்ணா, சம்பத்குமார் ஆகிய இருவரும் 200 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, 5 கிலோ காய்கறிகள், 2 கிலோ கோதுமை, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களின் தொகுப்பு உள்ளிட்டவை வழங்கினர்.

நரிக்குறவர் சமூக மக்கள் வரிசையாக நின்று பெற்று சென்றனர். இதுக்குறித்து நரிக்குறவர் சமூக மக்கள் செய்தியை வெளியிட்ட IBC தமிழ்நாடு நிறுவனத்திற்க்கும், உதவிய தொழிலதிபர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

https://youtu.be/hYjLKAGsUao

https://youtu.be/hYjLKAGsUao