ஒரு வருடமாக கொரோனாவால் இறந்தவர்களை மரியாதை செய்து தகனம் செய்யும் ஈஷா!

tamilnadu-samugam
By Nandhini May 26, 2021 03:37 AM GMT
Report

தமிழ்நாட்டில் ஈஷாவின் பராமரிப்பின் கீழ் இயங்கும் 18 மயானங்களில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்கள் மிகுந்த மரியாதையுடன் பாதுகாப்பாக தகனம் செய்யப்பட்டு வருகிறது.அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் உயிரையும் பணையம் வைத்து இச்சேவையை செய்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஈஷா மயானங்களில், காலமானவர்களை உகந்த சூழலில் நுண்ணுணர்வுடன் விடுவிக்க தன்னார்வத்தொண்டர்கள் அயராது உழைக்கிறார்கள். இது வாழ்வோருக்கும் விடைபெறுவோருக்கும் மிகவும் முக்கியம். ஆசிகள்" என்று பதிவிட்டுள்ளார்.

ஈஷா சார்பில் கோவையில் 12 மயானங்களும், சென்னையில் 4, நாமக்கல் மற்றும் நெய்வேலியில் தலா ஒன்று என மொத்தம் 18 மயானங்கள் உள்ளன. அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் மருத்துவ உதவிகளை ஈஷா வழங்குகிறது. அனைத்து மயானங்களும் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் சேவையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈஷாவின் முறையான பயிற்சியின் காரணமாக, உயிரிழந்தவர்களின் உடல்களை மிகுந்த மரியாதையுடன் தகனம் செய்கின்றனர்.

இப்பணியில் ஈஷாவின் பிரம்மச்சாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் ஆதரவளிக்கிறார்கள். மேலும், அங்கு கால பைரவர் சன்னதி இருப்பதால் அந்த இடம் ஒரு கோவில் போல் புனிதமாக பராமரிக்கப்படுகிறது.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால், மயானத்திற்கு வரும் இறந்தவர்களின் உறவினர்கள் ஈஷா ஊழியர்களின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ஒரு வருடமாக கொரோனாவால் இறந்தவர்களை மரியாதை செய்து தகனம் செய்யும் ஈஷா! | Tamilnadu Samugam