‘சூப்பர் மூன்’ இன்று வானில் தோன்றுகிறது!
இன்று வானில் சந்திர கிரகணம் தோன்ற உள்ளது. இந்த சந்திர கிரகணத்தை ‘சூப்பர் மூன் மற்றும் பிளட் மூன்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று ஏற்பட உள்ளது. சூரியன் – சந்திரன் – பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும். அப்போது, சூரிய ஒளி நிலவில் தென்படாது. அந்த நிகழ்வேதான் சந்திர கிரகணம் என்று கூறப்படுகிறது. சூரிய ஒளி பூமியின் மீது மேல் வழியாக சிதறியபடி விழும்.
இதனால் அதன் ஒளி சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். இதை ஆங்கிலத்தில் பிளட் மூன் என்றும், குருதி நிலவு என்று அழைப்பார்கள். இதை நாம் வெறும் கண்களாலேயே காணலாம். இந்தியாவின் பல முக்கிய இடங்களில் சந்திரகிரகணம் பார்க்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இன்று மதியம் 2.17 மணி முதல் இரவு 7.19 மணி வரை மிக நீண்ட சந்திரகிரகணம் நடைபெற உள்ளது. முழு சந்திர கிரகணம் மாலை 4.39 மணிக்கு தொடங்கி 4.58 மணிக்கு நிறைவு பெறும். சந்திர கிரகணம் தென்அமெரிக்கா, வடஅமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காணமுடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.