மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் ராஜகோபாலனால் சிக்கலில் சிக்கிய ‘PSBB பள்ளி’? - அதிர்ச்சி தகவல்

tamilnadu-samugam
By Nandhini May 25, 2021 11:24 AM GMT
Report

சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலன், வகுப்பில் படிக்கும் மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் எடுத்து வந்தார்.

இந்நிலையில், மாணவர்களுக்கு ராஜகோபாலன் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அவரிடம் நடத்திய விசாரணையில் பாலியல் தொல்லை கொடுத்ததை அவர் ஒப்புக் கொண்டார். மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் சில ஆசிரியர்கள் இதில் சிக்க வாய்ப்புள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் இன்று எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை ஜூன் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் கைதான ஆசிரியர், PSBB பள்ளி முதல்வர், நிர்வாகிகளுக்கு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஆசிரியர் பள்ளி நிர்வாகி உட்பட 5 பேர் ஜூன் 4ம் தேதி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் ராஜகோபாலனால் சிக்கலில் சிக்கிய ‘PSBB பள்ளி’? - அதிர்ச்சி தகவல் | Tamilnadu Samugam

முன்னாள் மாணவிகளும் ராஜகோபாலன் மீது குற்றச்சாட்டு

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ராஜகோபாலன், என்னை மாதிரி இன்னும் நிறைய கருப்பு ஆடுகள் அந்த பள்ளியில் இருக்கின்றன என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது ஒரு புறம் இருக்க, தற்போது படித்து வரும் மாணவிகள் தவிர, முன்னாள் மாணவிகளும் ராஜகோபாலன் மீது பாலியல் புகார்களை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக கூறி வருகின்றனர்.

இதனால் ராஜகோபாலன் விவகாரம் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் ராஜகோபாலனால் சிக்கலில் சிக்கிய ‘PSBB பள்ளி’? - அதிர்ச்சி தகவல் | Tamilnadu Samugam

பத்மா சேஷாத்ரி பள்ளி ஏ.ஆர்.ரகுமானை வெளியேற்றியதா?

பாலியல் புகாரினால் பரபரப்பாக பேசப்படும் வரும் பிஎஸ்பிபி பள்ளி, ஒரு காலத்தில் கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானை, அவரது தாயாரை அழைத்து, உங்கள் வசதிக்கு ஏற்ப சாதாரண பள்ளியில் சேர்த்து படிக்க வையுங்க என்று சொல்லி வெளியேற்றியுள்ளது.

கல்விக்கட்டணம் சிறிது சிறிதாக செலுத்துகின்றேன் என்று ரகுமானின் தாயார் சொன்னதையும் ஏற்றுக்கொள்ளாமல் கறார் காட்டி ரகுமானை பள்ளியை விட்டு வெளியேற்றியதாகவும் தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதன்பின்னர், ரகுமானை அவரது தாயார், மெட்ராஸ் கிரிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்து படித்து வைத்துள்ளார்.

இந்நிலையில், பிஎஸ்பிபி பள்ளி பாலியல் புகாரில் சிக்கியிருக்கும் இந்நேரத்தில், கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருந்த ஏ.ஆர்.ரகுமானை கறார் காட்டி வெளியேற்றியது இப்பள்ளி என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.