மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ராஜகோபாலனுக்கு சிறை தண்டனை.
பாலியல் புகாரில் கைதான சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை ஜூன் 8 வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ராஜகோபாலன். இவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசாருக்கு புகார் கிடைத்து.
இதனையடுத்து, ராஜகோபாலனிடம் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், இந்த விவகாரத்தில் பலர் இருப்பதாக அவர் கூறி போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர் ராஜகோபாலனிடம் விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தினர். பாலியல் தொல்லை கொடுத்ததை ராஜகோபாலன் ஒப்புக்கொண்டதால், போக்சோ உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அத்துடன் ராஜகோபாலனை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர். பின்னர் அவர் சிறையில் அடைத்து, காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டிருக்கின்றனர்.
இந்நிலையில், சென்னை கே.கே நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததால் ராஜகோபாலனை ஜூன் 8ம் தேதி வரை சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முகமது பரூக் உத்தரவிட்டிருக்கிறார்.