மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது!

tamilnadu-samugam
By Nandhini May 25, 2021 03:27 AM GMT
Report

மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ராஜகோபாலன். இவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசாருக்கு புகார் கிடைத்து. இதனையடுத்து, ராஜகோபாலனிடம் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், இந்த விவகாரத்தில் பலர் இருப்பதாக அவர் கூறி போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்தார். இதனைத் தொடர்ந்து ஆசிரியர் ராஜகோபாலனிடம் விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தினர்.

பாலியல் தொல்லை கொடுத்ததை ராஜகோபாலன் ஒப்புக்கொண்டதால், போக்சோ உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அத்துடன் ராஜகோபாலனை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர். பின்னர் அவர் சிறையில் அடைத்து, காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டிருக்கின்றனர். 

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது! | Tamilnadu Samugam