நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை கொலைக்கு இவர்தான் காரணம்? - சர்ச்சையில் மாட்டிய ஹெச்.ராஜா மீது புகார்!
சமீபத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேட்டி ஒன்று அளித்தார். அந்த பேட்டியில், நடிகர் சிவகார்த்திகேயன் தந்தையான ஜெயிலர் ஜெயபிரகாஷ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினராக தற்போது உள்ள ஜவாஹிருல்லா தான் என்று கூறினார்.
இவர் கூறிய பேச்சு பெரும் பரப்பையும், சர்ச்சையையும் கிளப்பி உள்ளது. இதனையடுத்து, ஹெச். ராஜா மீது மனிதநேய மக்கள் கட்சி சார்பாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அப்ரார் கூறியதாவது -
நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தையான ஜெயிலர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஆனால் வேண்டுமென்று ஜவாஹிருல்லாவின் மீது பழியைப் போடுகிறார்கள்.
ஜவாஹிருல்லாவின் பெயரைக் கெடுப்பதற்காகவே ஹெச். ராஜா பொய்யாக பேசி வருகிறார். இது, இஸ்லாமியர்களுக்கும், நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
ஹெச்.ராஜா மன்னிப்பு கேட்டாலும் கூட அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் சிவகார்த்திகேயனும் தலையிட்டு புகார் அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.