உணவின்றித் தவித்த 500 நரிக்குறவர்களுக்கு திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி உணவு வழங்கினார்!
பழனி அருகே உணவின்றித் தவித்த 500 நரிக்குறவர்களுக்கு திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி உணவு பொட்டலங்களை வழங்கினார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கொரோனா கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, பழனி அருகே பெத்தநாயக்கன் பட்டியில் வசித்து வரும் நரிக்குறவர்கள் 500 க்கும் மேற்பட்டோர் உணவின்றி தவித்து வருகின்றனர். இது குறித்து, திண்டுக்கல் சரக டிஐஜி தகவல் கிடைத்தது. இதன் பேரில் தன்னார்வலர்கள் மூலம் உணவின்றி தவித்த சுமார் 500 பேருக்கு சாப்பாடு பொட்டலங்கள் திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி வழங்கினார்.