வெளியே சுற்றி திரிபவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் - மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா!

tamilnadu-samugam
By Nandhini May 24, 2021 08:15 AM GMT
Report

முழு ஊரடங்கை கடைப்பிடிக்காமல் வெளியே சுற்றி திரிபவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது -

தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக உதகையில் இன்று முழு ஊரடங்கு கடைபிடித்தாலும், ஏராளமான வாகனங்கள் சாலையில் உலா வருகின்றன.

குறிப்பாக பொதுமக்கள் விவசாயம் செய்ய செல்வதாகவும், வங்கிக்கு செல்வதாகவும் உள்ளிட்ட பல்வேறு பணிக்கு செல்வதாக கூறி எந்த வித முகாந்திரமும் இல்லாமல் ஊரடங்கு உத்தரவை காற்றில் பறக்கவிட்டு சுற்றி திரிகின்றனர்.

மக்கள் அனைவரும் வீடுகளிலேயே இருக்க வேண்டும். முழு ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும்.

ஊரடங்கை கடைபிடிக்காமல் வெளியே சுற்றி திரிபவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும்.

விவசாயிகள் ஆன் லைன் மூலம் தோட்டக்கலை துறையினரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் உதகை நகரில் நேரில் வாகனங்களை ஆய்வு செய்து, முகாந்திரம் இல்லாமல் உலா வந்த வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தார்.  

வெளியே சுற்றி திரிபவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் - மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா! | Tamilnadu Samugam