கொரோனாவை விரட்ட வீடு வீடாகச் செல்லும் கழுதைகள்!
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனையடுத்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், முட்டைகள், இறைச்சிகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் சீதோசன நிலை மாற்றத்தினால் நிறைய பேர் சளி, இருமல், காய்ச்சல் வந்துவிடும் என்ற அச்சத்தில் உள்ளனர்.
எனவே, தர்மபுரி மாவட்டம் முழுவதும், சளி, இருமல், காய்ச்சல்லுக்கு கழுதைப்பால் உடனே தீர்வு தரும் என்று சொல்லியும், கொரோனாவை விரட்டக் கூடிய அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது கழுதைப்பால் என்று சொல்லியும் கழுதை பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
ஒரு டம்ளர் கழுதைப்பால் 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. கழுதையுடன் வீடு வீடாக சென்று அங்கேயே கழுதை பாலை கறந்து மக்களுக்கு கொடுத்து வருகின்றனர்.
நோய் எதிர்ப்பு சக்தியை கழுதைப் பாலில் அதிகம் உள்ளது என்று மக்கள் நம்புவதால் கழுதைப் பாலை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தர்மபுரி மாவட்டத்தில் கழுதைப் பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.