மதுரை ரயில்வே மருத்துவமனையில் 16 மருத்துவர்கள், 9 செவிலியர்களுக்கு கொரோனா உறுதி!

tamilnadu-samugam
By Nandhini May 22, 2021 06:09 AM GMT
Report

மதுரை அரசு மருத்துவமனை மற்றும் ரயில்வே மருத்துவமனை கொரோனோ வார்டில் பணியாற்றி வந்த 16 மருத்துவர்கள் மற்றும் 9 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மதுரை மாவட்டத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு 1000 முதல் 1300 ஆக அதிகரித்து வருகிறது. பெரும்பாலான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுகைகள் நிரம்பி வழிகின்றன.

நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனை மற்றும் ரயில்வே மருத்துவமனை கொரோனா வார்டில் பணியாற்றி வந்த 16 அரசு மருத்துவர்கள் மற்றும் 9 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. 

மதுரை ரயில்வே மருத்துவமனையில் 16 மருத்துவர்கள், 9 செவிலியர்களுக்கு கொரோனா உறுதி! | Tamilnadu Samugam