விருத்தாசலத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 5 கடைகளுக்கு சீல்!
விதிமுறைகளை மீறி விருத்தாசலத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
தமிழக அரசு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, சில தளர்வுகளுடன் காலை 6 மணி முதல் 10 மணி வரை கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் விதிமுறைகளை மீறி அனுமதியின்றி கடைகள் திறந்ததில்லாமல், கடையில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றியுள்ளனர். மேலும், கடைகளில் பொதுமக்கள் அதிகளவில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனடியாக, காவல்துறை ஆய்வாளர் விஜயரங்கன் தலைமையில் காவலர்கள் அங்கு விரைந்து சென்றார். விதிமுறைகளை மீறி செயல்பட்ட பாலக்கரை விஜய் ஹேர் ஸ்டைல், பஸ் நிலையம் அருகே உள்ள அருண் பேக்கரி, பெரியார் நகரில் உள்ள அபிதா பழக்கடை, அப் இன் ஸ்டால் உள்ளிட்ட 5 கடைகளுக்கு சீல் வைத்து, கடையின் உரிமையாளர்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.