‘பில்லா பாண்டி’ படத்தின் கதாசிரியர் மூர்த்தி கொரோனாவால் உயிரிழந்தார்!
‘பில்லா பாண்டி’ படத்தின் கதாசிரியர் எம்.எம்.எஸ்.மூர்த்தி கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரும், உயிரிழப்போரும் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பிடியில் அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், சினிமா நட்சத்திரங்களும் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் நகைச்சுவை, காதல், குடும்ப செண்டிமெண்ட் மற்றும் ஆக்ஷன் கலந்த ‘பில்லா பாண்டி’ படத்தை ராஜ்சேதுபதி இயக்கி இருந்தார். ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்த இப்படத்தில் எம்.எம்.எஸ்.மூர்த்தியின் கதாசிரியராக பணிபுரிந்தார். இவருடைய எழுத்தில் மதுரை மண்மணம் இருக்கிறது என்று இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில், மூர்த்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால், சிகிச்சைப் பலனில்லாமல் மூர்த்தியின் மரணமடைந்துள்ளது அவரது குடும்பத்தாரையும், நட்பு வட்டத்தையும், திரையுலகினரையும் கலங்க வைத்துள்ளது.
நடிகர் விவேக், நிதிஷ் வீரா, பாண்டு, நெல்லை சிவா, தாமிரா, கே.வி.ஆனந்த், பாபுராஜா, கோமகன் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனாவினால் உயிரிழந்து வருவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
