முதல்வரிடம் ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்த பில்ரோத் மருத்துவமனை!

tamilnadu-samugam
By Nandhini May 20, 2021 05:00 AM GMT
Report

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பில்ரோத் மருத்துவமனை சார்பில் ரூ.50 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

இதையேற்ற, திரை பிரபலங்களும், தொழிலதிபர்களும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்த பில்ரோத் மருத்துவமனையின் முதன்மைச் செயல் அலுவலர், டாக்டர் கல்பனா ராஜேஷ் நிவராண பணிகளுக்காக ரூ. 50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். 

முதல்வரிடம் ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்த பில்ரோத் மருத்துவமனை! | Tamilnadu Samugam