கொரோனா நுரையீரலுக்குள் நுழையாமல் கேட் போட்டு தடுக்கலாம்! நித்தி கொடுத்த ஐடியா!
இந்த நவீன விஞ்ஞான யுகத்தில், தொழில்நுட்பம் பெருகி வரும் காலகட்டத்தில், உலகின் எந்த மூலையில் இருந்தும் யார் வேண்டுமானாலும் யாரிடமும் எளிதாக அணுகலாம் என்ற சூழலில், உலகமே கைக்குள் அறிவிலாய் அடங்கிவிட்ட நிலையில், இன்னும் நித்யானந்தாவை மட்டும் கைது செய்ய முடியாத அதிசயம் நம் நாட்டில் உள்ளது.
சாமியார் நித்தியானந்தா பாலியல் வழக்குகளில் சிக்கி தலைமறைவாக உள்ளார். இவர் மீது ஏகப்பட்ட கேஸ்கள் பதிவாகி இருந்தும், கைலாசா என்ற ஒரு தீவில் இந்த சுவாமி வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. அவரை தேடி கைது செய்வதற்குள், கைலாசாவை தனி நாடாகவே அறிவித்துவிட்டார். அதற்கான பணம் மற்றும் அனைத்து சேவைகளையும் கொண்டு வந்துள்ளதாகவும் கூறி, இது தொடர்பாக ஒரு போட்டோ, வீடியோ, அந்த நாட்டு தங்க டாலர் உட்பட எல்லாவற்றையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், நித்தியானந்தா கொரோனா நோயை விரட்ட தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், கொரோனா நமது நுரையீரலுக்குள் நுழையாமல் இருக்க, கேட் போட்டு நிறுத்த வேண்டுமா? ஆன்ம லிங்கத்தை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு இரு கைகளால் அழுத்தி கை வைத்தியம் செய்யுங்கள். கொரோனா உங்களை நெருங்காது, அத்துடன் நவபாஷாணத்தின் மீது பொழியப்பட்ட பாலும், நீரும், வேம்பு ரசமும் கரும்பூஞ்சை நோய்க்கு மருந்து என்றும் கூறியுள்ளார்.
கொரோனாவுக்கு முடிவு கட்ட முடியாமல் வல்லரசு நாடுகள் கூட திணறி வருகின்றன. கொரோனா 2-வது அலையில் 2,83,248 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவை தடுக்கும் வண்ணம் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நித்தியானந்தாவின் இந்த வீடியோவைப் பார்த்து இணையவாசிகள் கிண்டலடித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.