முழு ஊரடங்கு - திருப்பூரில் முக்கிய சாலைகளை அடைத்து ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்த போலீஸ்!

tamilnadu-samugam
By Nandhini May 19, 2021 11:33 AM GMT
Report

ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டதையடுத்து திருப்பூரில் காவல்துறையினர் முக்கிய சாலைகளை அடைத்து ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கொரானா வைரஸ் 2-வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 10ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பித்தது. இந்நிலையில், கடந்த 15ம் தேதி முதல் ஊரடங்கில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் சிலவற்றை குறைத்து கடுமையான ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது.

நேற்றைய தினம் முதல் இ-பதிவு முறையில் பதிவு செய்யாதவர்கள் வெளியே செல்வதற்கு அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, இன்று திருப்பூர் நகரின் முக்கிய பகுதிகளில் சாலைகள் அடைக்கப்பட்டன. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே சுற்றுபவர்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கத் தொடங்கினர்.

மேலும் இ-பதிவு முறையில் பதிவு செய்தவர்கள் மட்டுமே சாலைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இ-பதிவு முறையில் பதிவு செய்யாதவர்களை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர். 

முழு ஊரடங்கு - திருப்பூரில் முக்கிய சாலைகளை அடைத்து ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்த போலீஸ்! | Tamilnadu Samugam