துப்பாக்கியுடன் நின்று போஸ் கொடுத்த பாஜக பிரமுகர் - போலீஸ் விசாரணை!

tamilnadu-samugam
By Nandhini May 19, 2021 06:12 AM GMT
Report

கோவையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, பாஜக பிரமுகர் துப்பாக்கியுடன் நிற்பது போன்ற புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்தவர் பிரதீப் ஜெகதீசன். இவரது மனைவி சௌமியா. பிரதீப் ஜெகதீசன் பாஜக ஆதரவாளர். இவர் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

அப்போது, தனது மனைவி சௌமியாவுடன் எடுத்துகொண்ட புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். அந்தப் புகைப்படத்தில் சௌமியா கையில் நாட்டு துப்பாக்கியுடன் நின்றிருந்த புகைப்படத்தைப் பார்த்தப் பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், பாஜக பிரமுகர் ஒருவர் கையில் நாட்டுத் துப்பாக்கி உடன் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியதால், இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கியுடன் நின்று போஸ் கொடுத்த பாஜக பிரமுகர் - போலீஸ் விசாரணை! | Tamilnadu Samugam