விஜய்யை விட அதிக சொத்து மதிப்புள்ள வேட்பாளர் - யார் இந்த லீமா ரோஸ்?
அதிமுகவை சேர்ந்த லீமா ரோஸ் தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளராக அறியப்படுகிறார்.
7600 பேர் c
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. மொத்தமாக சுமார் 7600 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனு பரிசீலனை இன்று தொடங்குகிறது. இதில் வேட்புமனுவில் உள்ள தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதி உள்ளவர்கள் மட்டும் இறுதி வேட்பாளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.
வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 9 என்பதால் அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர்
இந்நிலையில், தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளராக லால்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் உள்ளார்.

லீமா ரோஸ், நகைகள் உள்ளிட்ட 139.62 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள், நிலம் மற்றும் கட்டிடங்கள் உள்ளிட்ட 909.94 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் என தன்னிடம் ரூ.1,048 கோடி சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம், 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் பணக்கார வேட்பாளர்எ ன்ற பெருமையை லீமா ரோஸ் பெற்றுள்ளார்.

மேலும் தனது கணவர் லாட்டரி அதிபர் மார்டின் பெயரில் ரூ.4,159 கோடி சொத்து உள்ளதாகவும், மகன் ஜோஸ் டெய்சன் மார்டின் பெயரில் ரூ.665 கோடி சொத்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
லீமா ரோஸ்
முன்னதாக கடந்த 14 ஆண்டுகளாக பாரி வேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியில் பயணித்து வந்த லீமாரோஸ், கடந்த பிப்ரவரி மாதம் அதிமுகவில் இணைந்தார்.

அவருக்கு அதிமுகவில் மகளிர் அணி இணைச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இவரது மகன் ஜோஸ் டெய்சன் மார்டின், லட்சிய ஜனநாயக கட்சி கட்சியை தொடங்கி புதுச்சேரியில் அதிமுக பாஜக என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

தவெக கட்சியின் பிரச்சார மேலாண்மை பிரிவு செயலாளராக உள்ள ஆதவ் அர்ஜுனா, லீமா ரோஸ் மார்டினின் மருமகன் ஆவார்.
தவெக தலைவர் விஜய், ரூ.603.20 கோடி சொத்துக்களுடன், தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார்.