தமிழகத்தை விடாது தொறத்தும் மழை; மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த இரு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் நிலையில், 19 ஆம் தேதி கடலோர மாவட்டங்களிலும் 20, 21 ஆம் தேதிகளில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை நகரில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 87.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 71.6 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்குமென குறிப்பிடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட கடல் பரப்பில் இரவு வரை 2.3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் வீசக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.