தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேரள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக
இன்று தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்தமிழகம்,நீலகிரி,கோயம்புத்துார்,திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு,சேலம்,நாமக்கல் ,கரூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக வெப்பநிலை 35 டிகிரி செல்சியசாகவும்,குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியசாகவும் பதிவாக கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகம் முதல் 60 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.