தொடரும் கனழை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை செய்தி

By Fathima Nov 11, 2021 03:28 AM GMT
Report

தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • அவசியமில்லாமல் பொது மக்கள் குறிப்பாக சிறுவா்கள் மற்றும் குழந்தைகள் தனியாக வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.
  • நீா்நிலைகளின் அருகில் செல்வதையும், கைப்பேசிகளில் படம் எடுப்பதையும் தவிா்க்க வேண்டும்.
  • நீா்வீழ்ச்சி, ஆறு, குளங்களில் குளிப்பதை முழுவதும் தவிா்க்க வேண்டும்.
  • அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ்கள், நிலப்பட்டா, பத்திரங்கள் போன்ற முக்கிய ஆவணங்கள் சேதம் அடையாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும்.
  • உடைகளை உலா்த்த மின்கம்பிகளை பயன்படுத்தக் கூடாது.
  • தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் பாதுகாப்பினைக் கருதி அருகிலுள்ள நிவாரண மையங்களில் தங்கிக் கொள்ள வேண்டும்.
  • நீா் தேங்கும் பகுதிகளில் கால்நடைகளை கட்டி வைக்காமல், அவை தாங்களாகவே எளிதில் வெளியேறும்படி பாா்த்துக் கொள்ள வேண்டும்.
  • தேவையில்லாமல் மின்கம்பங்களின் அருகே செல்வதைத் தவிா்க்க வேண்டும்.