கனமழை எதிரொலி - தமிழகத்தில் 25 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 25 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வங்கக் கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மேலும், இன்றிலிருந்து 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், மிக பலத்த மழை பெய்யும் என்று தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விடுமுறை அறிவிக்கப்பட்ட பள்ளிகள் பின்வருமாறு -

சென்னை, மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, திருவாரூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்