தரைப் பாலத்தில் தேங்கிய வெள்ள நீர்... - சாக்கடையில் கையை விட்டு குப்பையை அகற்றிய காவலர்...!

Tamil nadu Tamil Nadu Police Madurai
By Nandhini Nov 14, 2022 11:32 AM GMT
Report

வெள்ளப் பெருக்கின் போது அடைப்பை ஏற்படுத்திய குப்பைகளை சாக்கடையில் கையை விட்டு காவலர் ஒருவர் அகற்றியுள்ளார்.

தமிழகத்தில் கனமழை

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

சென்னை, திருவள்ளூர், தஞ்சை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. ராசிபுரத்தில் பெய்த கனமழையால், ஆயிரக் கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால், அப்பகுதி விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

இந்நிலையில், இன்று கடலூர் மாவட்டம் கீழ்பூவாணிகுப்பம் பகுதியில் மழையால் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினார்.

சாக்கடையில் குப்பைகளை அகற்றிய காவலர்

இந்நிலையில், மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள தரைப் பாலம் முழுவதும் கனமழையால் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.

இந்த சூழலில் அங்கு பாதுகாப்பு பணியில் உதவி ஆய்வாளர் கல்யாண சுந்தரம் மற்றும் காவலர் ராமன் ஈடுபட்டனர்.

அப்போது, குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்லாத இடங்களில் சாக்கடையில் கையை விட்டு குப்பையை அகற்றி தண்ணீர் வடிய வைக்கும் பணியில் காவலர் ராமன் ஈடுபட்டார். மாநகராட்சி ஊழியர் செய்ய வேண்டிய வேலையை காவலர் தன்னந்தனியாக இருந்து இவர் செய்த பணியை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.   

tamilnadu-rain-police-madurai