தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 2ம் தேதி முதல் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்.
அதனையடுத்து அடுத்த இரு நாட்களுக்கு வடக்கு மாவட்டங்களில் காலை நேரத்தில் பனி மூட்டம் காணப்படும் என்றும், 3 ஆம் தேதி தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும், வறண்ட வானிலையே காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை நகரில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காலை நேரங்களில் பனி மூட்டம் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.